புதிய தலைமைச் செயலகம் விவகாரம்: முதல்வருக்கு தெரியாமல் அரசாணை வெளியாகவில்லை – அமைச்சர் வெங்கடரமணன் தகவல்

Priya
614 Views
1 Min Read

‘பட்​டினப்​பாக்​கத்​தில் புதிய தலை​மைச் செயல​கம் விவ​காரத்​தில், முதல்​வருக்கு தெரி​யாமல் அரசாணை வெளி​யானது என்​பது தவறான கருத்​து’ என அமைச்​சர் வெங்​கடரமணன் தெரி​வித்​துள்​ளார்.

சென்னை தேனாம்​பேட்​டை​யில் சமூக நலத்​துறை சார்​பில் கர்ப்​பிணி​களுக்கு சமூக வளை​காப்பு விழா நடை​பெற்​றது. இதில் கலந்​து​கொண்ட அமைச்​சர் வெங்​கட்​ரமணன், 100 கர்ப்​பிணி​களுக்கு சீர்​வரிசை உள்​ளிட்ட பொருட்​களை வழங்​கி​னார்.

அதைத்​தொடர்ந்து செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: மத்​திய அரசின் வழி​காட்​டு​ தலின்​படி குடும்ப அட்டைகளுக்கு 100 சதவீத பயோமெட்​ரிக் பதிவு கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது. விரல் ரேகை பதிவு செய்​யாத உறுப்​பினர்​களின் பெயர்​கள் தற்​காலிக​மாக நீக்​கப்​படலாம்.

அவர்​கள் பதிவு செய்​யும்​போது மீண்​டும் பெயர்​களைச் சேர்த்​துக் கொள்​ளலாம். புதிய தலைமைச் செயலகம் தொடர்​பாக விரி​வான திட்ட அறிக்கை தயார் செய்​யும் பணி​கள் மட்​டுமே தற்​போது நடை​பெற்று வரு​கின்​றன.

திட்ட அறிக்கை தயா​ரான உடனேயே அங்கு கட்​டிடம் கட்​டப்​பட்டு விடும் என்று அர்த்​தமில்​லை. ஒரு திட்​டத்​துக்​கான அரசாணை அனைத்​துச் செயல்​முறை​களுக்​கும், ஆய்​வு​களுக்​கும் பிறகு முதல்​வரின் கவனத்​துக்கு எடுத்​துச் செல்​லப்​பட்டு அரசாணை​யாக வெளி​யாகும்.

எனவே முதல்​வருக்கு தெரி​யாமல் அரசாணை வெளி​யானது என்​பது தவறான கருத்​து. இந்த அரசு எப்​போதும் மீனவர்​களுக்​கும், பெண்​களுக்​கும், குழந்​தைகளுக்​கும், இளைஞர்​களுக்​கும் உறு​துணை​யாக இருக்​குமே தவிர, எந்​தச் சூழலிலும் மக்​கள் விரோதப்போக்​கோடு செயல்​ப​டாது.

நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் லஞ்​சம் அல்​லது முறை​கேடு​கள் நடப்​ப​தைத் தடுக்க 7 பேர் கொண்ட கண்​காணிப்​புக் குழு 24 மணி நேர​மும் செயல்​பட்டு வரு​கிறது. கூட்​டணி கட்​சிகளிடையே எந்​த​வித அழுத்​த​மும் இல்​லை.

அனைத்து தலை​வர்​களும், அமைச்​சர்​களும் எம்​எல்​ஏக்​களும் மிக​வும் இணக்​க​மாக​வும் ஆதர​வாக​வும்​தான் செயல்​பட்டு வரு​கின்​றனர். இவ்​வாறு அவர் கூறி​னார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply