இடைத்தேர்தலில் ஆட்சியாளர்களுக்கு சரியான தண்டனை வழங்க வேண்டும்: உதயநிதி ஸ்டாலின் கருத்து

Priya
731 Views
2 Min Read

இடைத்​தேர்​தலில் ஆட்​சி​யாளர்​களுக்கு சரி​யான தண்​டனை வழங்க வேண்​டும் என எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் தெரி​வித்​துள்​ளார்.

பூந்​தமல்லி நகர இளைஞரணி அமைப்​பாளர் முகமது ராஷிக் – மரி​யம் பாத்​திமா ஆகியோரின் திரு​மணம் வேலப்​பன்​சாவடி​யில் நேற்று நடை​பெற்​றது. எதிர்க்​கட்​சித் தலை​வரும், திமுக இளைஞரணி செய​லா​ள​ரு​மான உதயநிதி ஸ்டா​லின் திரு​மணத்தை நடத்தி வைத்து மண மக்​களை வாழ்த்​தி​னார். அப்​போது அவர் பேசி​ய​தாவது:

இஸ்​லாமியர்​களுக்​கும் திமுக​வுக்​கு​மான உறவு காயிதே மில்​லத் காலத்​தில் உரு​வானது. இந்த உறவு நாளுக்கு நாள் வளர்ந்து மிக​வும் வலிமை​யாகி​யுள்​ளது. தமிழ்​நாட்​டில் சட்​டம் ஒழுங்கு இன்று எந்த நிலை​மை​யில் உள்​ளது என்று எல்​லோருக்​கும் தெரி​யும். நேற்று முன்​தினம் மட்​டும் தமிழகத்​தில் 8 படு​கொலைகள் நடந்​துள்​ளன.

மின்​வெட்டு உச்​சத்​தில் உள்​ளது. முதல்​வரின் பெரம்​பூர் தொகு​தி​யிலேயே மின்​வெட்​டைக் கண்​டித்து மக்​கள் சாலை​யில் போராடி வரு​கின்​றனர். தேர்​தல் அறிக்​கையில் கொடுத்த வாக்​குறு​தி​களில் ஒன்​றைக் கூட இது​வரை நிறைவேற்​ற​வில்​லை. ஒன்று நாம் கொண்டு வந்த திட்​டத்தை ரத்து செய்து இருக்​கிறார்​கள்; அல்​லது நமது திட்​டங்​களை மீது ஸ்டிக்​கர் ஒட்​டி​யிருக்​கிறார்​கள்.

சட்​டப்​பேர​வை​யில் சட்​டம் ஒழுங்கு குறித்து முதல்​வரிடம் 16 கேள்வி​களைக் கேட்​டேன். தயார் செய்​து​கொண்டு வரு​வ தாக கூறி​விட்​டுச் சென்​றவர், 3 நாள் கழித்து வந்​து, நான் கேட்ட கேள்விக்கு முறை​யான எந்த பதி​லும் சொல்​ல​வில்​லை. மாறாக 50 வருடங்​களுக்கு முன்​புள்ள சர்க்​காரியா கமிஷன், மிசா பற்றி பேசி​னார்.

தற்​போது உள்ள ஆட்​சி​யாளர்​கள் தாங்​கள் ஆட்​சிக்கு வந்​து​விட்​டதை அவர்​களே இன்​னும் நம்​ப​வில்​லை. எந்த கேள்வி கேட்​டாலும் திமுக ஆட்​சி​யில் நடந்​தது என்று திமுக மீது பழி​போடு​வதை மட்​டுமே முதல்​வரும், அமைச்​சர்​களும் செய்து வரு​கிறார்​கள்.

அதி​முக சட்​டப்​பேரவை உறுப்​பினர்​களை விலைக்கு வாங்​கும் செயலில் இந்த அரசு இறங்​கி​யுள்​ளது. இப்​படி விலைக்கு வாங்​கியதால்​தான் மது​ராந்​தகம், தாராபுரம் தொகு​திகளில் இடைத்​தேர்தல் நடக்க இருக்​கிறது. இதை மக்​களுக்கு நாம் அம்​பலப்​படுத்த வேண்​டும். அதற்கு சரி​யான தண்​டனையை வரு​கின்ற இடைத்​தேர்​தலில் வழங்க வேண்​டும்.

ஆளுங்​கட்​சி​யாக இருந்​தா​லும், எதிர்க்​கட்​சி​யாக இருந்​தா​லும் திமுக என்றும் மக்​களுக்​காக களத்​தில் நிற்​கும் என்​பதை இந்த தேர்​தல் மூல​மாக நாம் நிரூபிக்​க வேண்​டும். இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply