காந்தா: ‘ஜெயிலர் 2’-வில் வித்யா பாலன் கதாபாத்திரம் அறிமுகம்

Priya
908 Views
1 Min Read

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ படத்தில் இந்தி நடிகை வித்யா பாலன் ‘காந்தா’ என்ற கதாபாத்திரத்தில் இணைந்துள்ளதை உறுதி செய்து, சன் பிக்சர்ஸ் அறிமுக வீடியோவை வெளியிட்டுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள 25 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில் , நீல நிற சேலை அணிந்து, கையில் சிகரெட்டுடன் படிக்கட்டுகளில் வித்யா பாலன் இறங்கி வருகிறார்.”இங்கே வந்த பிறகு எங்கள் பேச்சைக் கேட்காமல் யாரும் வெளியேற முடியாது” என்ற வசனத்துடன் அவர் பேசும் காட்சி, ரஜினிக்கு எதிரான பவர்ஃபுல் கதாபாத்திரமாக இது இருக்கும் என்பதை உணர்த்துகிறது.

முந்தைய அறிமுக வீடியோக்களைப் போலவே அனிருத்தின் அதிரடியான பின்னணி இசை இந்த கதாபாத்திர அறிமுக வீடியோவிற்கும் கூடுதல் பலம் சேர்த்துள்ளது. ஏற்கனவே எஸ்.ஜே. சூர்யா ‘போதி’ என்ற கதாபாத்திரத்திலும், சுராஜ் வெஞ்சரமூடு ‘திலீப்’ என்ற கதாபாத்திரத்திலும் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது வித்யா பாலனின் ‘காந்தா’ தோற்றம் வெளியாகியுள்ளது.

மேலும் மிதுன் சக்ரவர்த்தி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பலர் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ வரும் அக்டோபர் 15 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது

Share This Article
Leave a Comment

Leave a Reply