2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா உள்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடை விதித்தது.
எனவே டாலர் மதிப்பில் பிற உலக நாடுகளுடன் வர்த்தகம் மேற்கொள்ள ரஷ்யாவிற்கு சிக்கல் இருந்து வந்தது.
இதனால், ரஷ்யா உடனான ஏற்றுமதி- இறக்குமதி வர்த்தகத்தை இந்திய நாட்டின் ரூபாய் மதிப்பில் மேற்கொள்ள இரு நாடுகளும் முடிவு செய்தன.
அதைத்தொடர்ந்து, ரஷ்ய நிறுவனங்கள் இந்தியாவிடமிருந்து 4 மில்லியன் டாலர் மதிப்புள்ள அதாவது, 33 ஆயிரம் கோடி நேரடி இந்திய ரூபாய்க்கு ஆயுதங்கள் உட்பட பல்வேறு பொருட்களின் இறக்குமதியை மேற்கொண்டிருக்கிறது.
வரும் காலங்களில் இந்திய ரூபாய் மதிப்பிலேயே வர்த்தகம் செய்ய ரஷ்யா முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.