“இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதி” – அமைச்சர் ராஜ்மோகன்

Priya
909 Views
1 Min Read

“தமிழகத்தில் எப்போதும் இருமொழிக் கொள்கைதான். அதில் அரசு உறுதியாக உள்ளது” என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

இது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தால் கூடுதலாக 15.30 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். மாணவர்களுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதன் மூலம் கல்வி வளர்ச்சி அதிகரிக்கும். இதற்காக பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, பள்ளிகளில் சமையலறை, பாத்திரங்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

புதிய உணவு வகைகள் பட்டியல் உருவாக்க சிறப்புக் குழு அமைக்கப்பட உள்ளது. சிறைக் கைதிகளுக்குகூட சிக்கன் பிரியாணி கிடைக்கும்போது, பள்ளிக் குழந்தைகளுக்கு அதை வழங்கலாமே என்ற விருப்பம் முதல்வருக்கு உள்ளது. இந்தத் திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. சுகாதாரமான முறையில் சிக்கன் பிரியாணி தயாரித்து வழங்குவது சாத்தியமா என்று சோதனை முயற்சி மூலம் ஆய்வு செய்து, வருங்காலத்தில் மாணவர்களுக்கு நிச்சயமாக சிக்கன் பிரியாணி வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

தமிழகத்தில் எப்போதும் இருமொழிக் கொள்கைதான். அதில் அரசு உறுதியாக உள்ளது. ஓராசிரியர் பள்ளிகளில் மாணவர் – ஆசிரியர் விகிதத்தை சரிசெய்யும் பணி நடந்து வருகிறது. தூய்மைப் பணியாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு விரைவில் சுமுகத் தீர்வு காணப்படும்” என்றார்.

முன்னதாக, நவோதயா பள்​ளி​களை நிறு​வுவதற்​கான இடங்​களை 3 மாதங்​களுக்​குள் தமிழக அரசு அடை​யாளம் காண உத்​தர​விட்ட உச்ச நீதி​மன்​றம், மாநிலத்​தில் அரசு மாறி​யுள்​ள​தால் மனநிலை​யிலும் மாற்​றத்தை எதிர்​பார்ப்​ப​தாக தெரி​வித்​தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply