2020 காலகட்டத்தில் சீன போன்களுக்கென்று மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. மக்கள் அதிகளவில் சீன போன்களைப் பயன்படுத்தினார்கள் ஆனால் அதற்கடுத்து பிரபலமான பிராண்டுகளின் வருகையால் சீன போன்களின் மவுசு குறைந்தது.
ஐபோன், சாம்சங் உள்ளிட்ட பிராண்டுகளைத் தான் மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். இவைகளுக்கு அடுத்ததாக தற்போது சீன ஸ்மார்போன்களான Xiaomi, Vivo, Oppo, Realme, Transsion, Motorola ஆகிய பிராண்டுகள் மக்களைக் கவர்ந்துள்ளன. கடந்த காலாண்டில் அதன் விற்பனை அளவும் கூடியிருக்கின்றன.
2023 காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இதே சீன ஸ்மார்ட் போன்கள் குறைந்த அளவே விற்பனையாகியிருந்தாலும் நிறைய லாபம் கிடைத்திருப்பதாகவும்,
2024 ஆம் ஆண்டு காலகட்டத்தின் கடைசி காலாண்டினை ஒப்பிடுகையில் சீன ஸ்மார்ட்போன்கள் உற்பத்தியிலும், விற்பனையிலும் அதிகமாக இருந்தாலும் லாபம் என்பது குறைவாக உள்ளதாக கவுண்டர்பாயிண்ட் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Motorola மற்றும் Transsion போன்ற சிறிய பிராண்டுகளும் சந்தையில் தங்கள் தடத்தை விரிவுபடுத்த தொடங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.