சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம், ‘மண்டவெட்டி’. டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் சார்பில் அவரே தயாரித்துள்ள இப்படம், உளவியல் ரீதியான பதற்றம், நாட்டுப்புற நம்பிக்கைகள் மற்றும் மனித உணர்வுகளை ஒருங்கிணைக்கும் இருண்ட அமானுஷ்ய க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ளது.
செஞ்சி எனப்படும் சக்திவாய்ந்த உள்ளூர் தெய்வத்தைச் சுற்றியுள்ள மர்மமான தொன்மக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு, ஆழமான அச்சத்தையும் உணர்வுப்பூர்வமான தாக்கத்தையும் ஏற்படுத்தும் வகையில் இப்படத்தின் கதை நகர்கிறது. பிரகாஷ் மனிதன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு தீபக் வேணுகோபால் இசையமைத்துள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக கோமலி பிரசாத் நடித்துள்ளார். இப்படத்தின் டீஸர் வரவேற்பைப் பெற்று வருகிறது.

