நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயிலை மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் இயக்க திட்டம்

Priya
736 Views
1 Min Read

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலை மணிக்கு 110 கி.மீ. வேகத்​தில் இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ள​தாக, ரயில்வே வாரியத் தலை​வர் மற்​றும் தலை​மைச் செயல் அதி​காரி சதீஷ் குமார் தெரி​வித்​துள்​ளார்.

மத்​திய பிரதேச மாநிலம் இந்​தூரில் ரயில்வே வாரி​யத் தலை​வர் மற்​றும் தலை​மைச் செயல் அதி​காரி சதீஷ் குமார் செய்தியாளர்களிடம் நேற்று கூறிய​தாவது: இந்​தி​யா​விலேயே முதல் முறை​யாக ஹைட்​ரஜனில் இயங்​கும் ரயில் சேவையை கடந்த ஜூலை 17-ம் தேதி பிரதமர் நரேந்​திர மோடி தொடங்கி வைத்​தார்.

இது ஹரி​யானாவில் உள்ள 89 கி.மீ. நீள​முள்ள ஜிந்த் – சோனிபட் வழித்​தடத்​தில் இயக்​கப்​படு​கிறது. இந்த ரயி​லின் இயக்க வேகம் இது​வரை மணிக்கு 75 கி.மீ. ஆக உள்​ளது. எனினும், மணிக்கு 120 கி.மீ. வேகத்​தில் இயக்​கு​வதற்​கான சோதனை ஓட்​டங்​கள் நிறைவடைந்​துள்​ளன.

இதையடுத்​து, இந்த ரயிலை மணிக்கு 110 கி.மீ. வேகம் வரை இயக்க இந்​திய ரயில்வே திட்​ட​மிட்டு வரு​கிறது. இந்த ரயிலை எந்த வழித் தடங்​களில் இயக்​கு​வது என்​பது குறித்து சம்பந்தப்பட்ட தரப்​பினருடன் ஆலோ​சனை நடத்​தப்​பட்டு வருகிறது. தொழில்​நுட்​பப் பிரச்​சினை​கள் மற்​றும் ஹைட்​ரஜன் எரிபொருள் விநி​யோக ஏற்​பாடு​கள் குறித்​தும் ஆய்வு செய்யப்பட்டு வரு​கிறது.

படுக்கை வசதி (ஸ்​லீப்​பர்) கொண்ட முதல் வந்தே பாரத் ரயில் தற்​போது ஹவுரா – காமாக்யா இடையே இயக்​கப்​பட்டு வரு​கிறது. மேலும், 4 ரயில்​கள் தயா​ராகி​யுள்​ளன. இந்த ஆண்டு மேலும் 11 ரயில்​கள் பயன்​பாட்​டுக்கு வரும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இவ்வாறு சதீஷ் குமார்​ கூறி​னார்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply