நாட்டில் அதிகமாக வருவாய் ஈட்டுவதில் சென்னை சென்ட்ரல் நிலையத்துக்கு 3-வது இடம்

Priya
1012 Views
1 Min Read

நாட்​டில் அதி​க​மாக வரு​வாய் ஈட்​டும் முதல் 10 ரயில் நிலை​யங்​களில், சென்னை சென்ட்​ரல் ரயில் நிலை​யம் 3-வது இடத்தை பிடித்​துள்​ளது.

ரயில்​வே​யில் பல்​வேறு தொலைநோக்கு திட்​டங்​களு​டன், நவீன கட்​டமைப்​பு​களை மத்​திய அரசு உரு​வாக்கி வரு​கிறது. இதனால், ரயில்​களின் இயக்​கம் அதி​கரித்து வரு​கிறது.

குறிப்​பாக, மாநகரங்​களில் பயணி​களின் எண்​ணிகை ஆண்​டு​தோறும் 7 முதல் 9 சதவீதம் வரை அதி​கரித்து வரு​கிறது. அந்த வகை​யில், கடந்த நிதி ஆண்​டி​யில், ரயில்​வே​யின் தகவலின்​படி, நாட்​டிலேயே பயணி​கள் பிரி​வில், அதி​க​மாக வரு​வாய் ஈட்​டும் முதல் 10 இடங்​களில் சென்னை சென்ட்​ரல் 3-வது இடத்​தில் உள்​ளது.

இதுகுறித்​து, தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோ​சனை குழு உறுப்​பினர் ஜாபர் அலி கூறிய​தாவது: வரு​வாய் ஈட்​டு​வ​தில் முதலிடத்​தில் டெல்லி ரயில் நிலை​யம் ரூ.3,337 கோடி​யும், 2-ம் இடத்​தில் மேற்கு வங்க மாநிலம் ஹவுரா ரயில் நிலை​யம் ரூ.1,692 கோடி​யும், 3-வது இடத்​தில் சென்னை சென்ட்​ரல் ரயில் நிலை​யம் ரூ.1,299 கோடி​யும், 4- வது இடத்​தில் தெலங்​கானா மாநிலம் செகந்​தி​ரா​பாத் ரயில் நிலை​யம் ரூ.1,276 கோடி​யும், 5-வது இடத்​தில், டெல்லி ஹஸ்​ரத் நிஜா​முதீன் ரயில் நிலை​யம் ரூ.1,227 கோடி வரு​வா​யும் ஈட்​டி​யுள்​ளன.

இதையடுத்​து, மும்​பை, அகம​தா​பாத், பூனே ரயில் நிலை​யங்​களும் இடம் பெற்​றுள்​ளன. மேற்​கண்ட முக்​கிய நகரங்​கள் நான்கு வழி பாதைகளாக மாற்​றப்பட உள்​ளன.

இதனால், பயணி​கள், சரக்கு ரயில்​களின் எண்​ணிக்கை படிப்​படி​யாக அதி​கரிக்​கும். ரயில் பாதை பணி​கள் முடி​யும்​போது, 2030ல் தற்​போதுள்​ளதை காட்​டிலும், 50 சதவீதம் ரயில்​கள் அதி​கரிக்க ரயில்வே இலக்கு நிர்​ண​யித்​துள்​ளது. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply