அமீர் நடிக்கும் ‘மாகாளி’

Priya
758 Views
1 Min Read

அமீர் முதன்​மைக் கதா​பாத்​திரத்​தில் நடிக்​கும் படத்​துக்கு ‘மா​காளி’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். இப்​படத்தை ஐங்​கரன் சார்​பாக கே. கருணா​மூர்த்தி – நவ்வி சார்​பாக திவ்யா மாரி செல்​வ​ராஜ் மற்​றும் இயக்​குநர் மாரி செல்​வ​ராஜ் இணைந்து தயாரிக்​கின்​றனர். எஸ்​.பி.அர​விந்த் இப்​படம் மூலம் இயக்​குந​ராக அறி​முக​மாகிறார்.

இதில், அனில்​கு​மார், ஹரிஹரன், ராம், லெனின் பாரதி உள்​ளிட்​டோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர். செல்வரத்தினம் பிரதீப் ஒளிப்​ப​திவு செய்​யும் இப்​படத்​துக்கு ஜஸ்​டின் பிர​பாகரன் இசை அமைக்​கிறார். “மனித வாழ்​வின் வலி, எல்​லைகள் மற்​றும் ஆழமான சமூக அக்​கறை கொண்ட அழுத்​த​மான கதைக்​களத்​தில் இப்​படம் உரு​வாகி வரு​கிறது” என படக்​குழு தெரி​வித்​துள்​ளது. இதன் படப்​பிடிப்பு பூஜை​யுடன் தொடங்​கி​யுள்​ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply