இளையராஜாவின் ‘கல்யாண விருந்து’

Priya
656 Views
1 Min Read

இது ஜென்-ஸி காலம். சத்தங்களே இசையாகிப் போன காலம். பாடலுக்கு வரிகள் முக்கியமா இசை முக்கியமா என்ற பட்டிமன்றங்கள் ஓய்ந்து, பாடலுக்கு வரிகள் தேவையா என்னும் வினாவோடு இசை உலவுகிற காலம். இப்படிப்பட்ட காலத்தில் ஒரு புதிய படத்தில் வரிகள் தெளிவாகக் கேட்கும்; விண்டேஜ் மணக்கும் பாடல் வெளிவந்திருக்கிறது. அதுவும் இசைஞானி இளையராஜாவிடம் இருந்து. இப்போது ‘டேடிஸ் ஹோம்’ என்று என்ட்ரி கொடுத்து, சமூக வலைதளங்களை ஆட்சி செய்து வருகிறார் இளையராஜா.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘டோரதி’ படத்தில் இளையராஜா இசையில் ‘கல்யாண விருந்து’ என்னும் பாடல் ஆக. 22-ம் தேதி வெளியானது.

யுகேந்திரன், அந்தோணி தாசன், பிரியா ஜெர்சன் ஆகியோர் பாடியிருக்கும் இந்தப் பாடல் 80-களை நினைவுப்படுத்துவதாக அமைந்துள்ளது. பாடலின் வரிகளையும் இளையராஜாவே எழுதியுள்ளார்.

கல்யாண விருந்து பற்றியதாகத் தொடங்குகிறது பாடல். பின்னர் அந்தக் கல்யாணத்துக்கு வந்த காதலன் தனது கஷ்டங்களைச் சொல்வதாகவும் கல்யாணப் பெண் அவளது நிலையை எடுத்துரைப்பதாகவும் பாடல் அமைந்துள்ளது எனலாம். ஆனால் பாடல் முழுக்கவும் ‘வைப்’ ஆகத் தான் இருக்கிறது. பாடல் மட்டுமின்றி, அண்மையில் வெளிவந்த சில பாடல்களோடு ஒப்பிட்டுக் காட்டும்படியான காணொளிகள் சமூக வலைதளங் களில் பெரிதும் பரவி வருகின்றன.

Share This Article
Leave a Comment

Leave a Reply