யூடியூபில் 600 கோடி பார்வைகள் – ‘கங்னம் ஸ்டைல்’ புதிய சாதனை

Priya
725 Views
1 Min Read

கடந்த 2012-ம் ஆண்டு யூடியூப் உலகை ஆட்சி செய்த பாடல் தான் ‘கங்​னம் ஸ்டைல்’. தென் கொரிய பாப் பாடக​ரான சை (PSY) பாடி ஆடிய இந்​தப் பாடல் உலகம் முழு​வதும் வரவேற்​பைப் பெற்​றது.

பாடலில், ‘சை’ ஆடிய பிரபல​மான குதிரை சவாரி நடன அசைவு மிகப்​பெரும் வரவேற்​பைப் பெற்​றது. உலகம் முழு​வதும் ஆயிரக்​கணக்​கானோர் அவரைப் போலவே நடன​மாடி டான்ஸ் வீடியோக்​களை உரு​வாக்​கினர்.

பாடல் வெளி​யான அடுத்த ஆண்​டிலேயே 120 கோடி (1.2 பில்​லியன்) பார்​வை​களைப் பெற்​றிருந்​தது. யூடியூபில் 100 கோடி பார்​வை​களைப் பெற்ற முதல் வீடியோ என்ற சாதனையை​யும் இந்​தப் பாடல்​தான் முதலில் படைத்​தது. அப்​போது அந்​தப் பாடல் மூலம் ரூ.80 கோடிக்​கும் அதி​க​மான வரு​வாய் கிடைத்​த​தாகத் தகவல்​கள் வெளி​யாகின.

இந்​நிலை​யில் இப்​பாடல், 14 ஆண்​டு​களுக்​குப் பிறகு யூடியூபில் 600 கோடி பார்​வை​களைக் கடந்து புதிய வரலாற்​றுச் சாதனையைப் படைத்​துள்​ளது. இதனால் இப்​பாடலுக்​குக் கிடைத்​திருக்​கும் வரு​மானம் பற்​றிய பேச்சு எழுந்​துள்​ளது. விளம்​பரங்​கள் மூலம் மட்​டும் காப்​புரிமை உரிமை​யாளர்​களுக்​குப் பல கோடி டாலர்​கள் வரு​மானம் கிடைத்​திருக்​கலாம் என்று கூறப்​படு​கிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply