சூரியின் ‘மண்டாடி’ படத்துக்கு U/A சான்றிதழ்!

Priya
1267 Views
1 Min Read

சூரி நடிப்பில் வெளியாக இருக்கும் ‘மண்டாடி’ படத்துக்கு தணிக்கை வாரியம் U/A (16+) சான்றிதழ் வழங்கியுள்ளது.

‘மண்டாடி’ படத்தின் இரண்டாவது சிங்கிள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்றிருந்த நிலையில், படம் தற்போது தணிக்கை நடைமுறைகளையும் நிறைவு செய்துள்ளது. தணிக்கை வாரியத்தின் தகவல்படி, சுமார் 2 மணி 34 நிமிடங்கள் ஓடும் படத்துக்கு U/A (16+) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

கடலோர மக்களின் வாழ்க்கை, பாரம்பரியம், உணர்வுகள், அவர்களின் மன உறுதியை மையமாகக் கொண்ட ஸ்போர்ட்ஸ் ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகி இருக்கும் ‘மண்டாடி’ படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்கி இருக்கிறார்.

ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் சூரியுடன் மஹிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், மிதுன், பால சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகி இருக்கும் இந்தப் படத்துக்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். செப்டம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் அறிவிக்கப்பட்டிருந்த படம் தற்போது செப்டம்பர் 10-ம் தேதி வெளியாக இருக்கிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply