அறிமுகமில்லாத நபர்களிடம் தனிப்பட்ட புகைப்படங்களை பகிர வேண்டாம்: மாணவிகளுக்கு போலீஸார் அறிவுறுத்தல்

Priya
680 Views
1 Min Read

அறி​முகமில்​லாத நபர்​களிடம் தனிப்​பட்ட புகைப்​படங்​களை பகிர வேண்​டாம் என கல்​லூரி மாணவி​களுக்கு சைபர் க்ரைம் போலீஸார் அறி​வுறுத்தி உள்​ளனர்.

சென்னை பெருநகர காவல் துறை சார்​பில், சைபர் குற்​றங்​களில் இருந்து பொது​மக்​களை​யும் மாணவர்​களை​யும் பாது​காக்​கும் நோக்​கில் தொடர் விழிப்​புணர்வு நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.

அதன் ஒரு பகு​தி​யாக, சென்னை ராணி மேரி கல்​லூரி​யில் நேற்று இணை​ய​வழி குற்​றத்தடுப்பு விழிப்​புணர்வு மற்​றும் உறு​தி​மொழி ஏற்பு நிகழ்ச்சி நடை​பெற்​றது.

இணை​ய​வழி குற்​றத் தடுப்​புப் பிரிவு காவல் துணை ஆணை​யர் கே.எஸ்​.​பால​கிருஷ்ணன் தலை​மை​யில் நடை​பெற்ற இந்​நிகழ்ச்​சி​யில், தற்​போது பரவி வரும் பல்​வேறு மோசடிகள் குறித்து மாணவி​களுக்கு விளக்​கப்​பட்​டது.

குறிப்​பாக, ஆன்​லைன் வர்த்தக மோசடி, டிஜிட்​டல் கைது மோசடி, போலி முதலீட்டு மோசடி உள்​ளிட்ட பல்​வேறு இணை​ய​வழி குற்​றங்​கள் குறித்​தும், அவற்​றில் பொது​மக்​கள் மற்​றும் மாணவர்​கள் எவ்​வாறு ஏமாற்​றப்​படு​கின்​றனர் என்​பது குறித்​தும் விரி​வாக எடுத்​துரைக்​கப்​பட்​டது.

மேலும், மாணவி​கள் சமூக வலை​தளங்​களை கையாளும் போது கடைப்​பிடிக்க வேண்​டிய பாது​காப்பு வழி​முறை​கள் குறித்​தும் ஆலோ​சனை​கள் வழங்​கப்​பட்​டன.

குறிப்​பாக, அறி​முகமில்​லாத நபர்​களிடம் தனிப்​பட்ட புகைப்​படங்​கள் மற்​றும் தகவல்​களைப் பகிர வேண்​டாம் எனவும், சந்​தேகத்​துக்​கிட​மான லிங்க்​-கு​களை கிளிக் செய்ய வேண்​டாம் எனவும் எச்​சரிக்​கப்​பட்​டது.

இணை​ய​வழி குற்​றங்​களால் யாரேனும் பாதிக்​கப்​பட்​டால், உடனடி​யாக 1930 என்ற உதவி எண்ணை அழைக்க வேண்​டும் அல்​லது www.cybercrime.gov.in என்ற இணை​யதளத்​தில் புகார் பதிவு செய்ய வேண்​டும் என்று அறி​வுறுத்​தப்​பட்​டது.

தொடர்ந்​து, “இணை​ய​வழி குற்​றங்​களுக்கு எதி​ராக விழிப்​புடன் செயல்​படு​வோம், இது குறித்து குடும்​பத்​தினர் மற்​றும் நண்​பர்​களிடம் விழிப்​புணர்வு ஏற்​படுத்​து​வோம்” என்று சுமார் 2,500 மாணவி​கள் உறு​தி​மொழி எடுத்​துக்​கொண்​டனர்.

இந்த பிரம்​மாண்ட நிகழ்ச்​சி​யில் ராணி மேரி கல்​லூரி முதல்​வர் கலை​வாணி, இணை​ய​வழி குற்​றத்​தடுப்பு பிரிவு கூடு​தல் காவல் துணை ஆணை​யர் விஸ்​வ​நாத் ஜெயன், உதவி ஆணை​யர்​கள் மனோஜ்கு​மார், ராகவி மற்​றும்​ காவல்​ ஆய்​வாளர்​கள்​ கலந்​து​கொண்​டனர்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply