இந்திய தேர்தல் நடைமுறைக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு

Priya
493 Views
2 Min Read

இந்திய தேர்தல் நடைமுறைக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பாராட்டு தெரி​வித்​துள்​ளார்.

கடந்த 2020-ம் ஆண்டு நடை​பெற்ற அமெரிக்க அதிபர் தேர்​தலில் குடியரசு கட்சி வேட்​பாளர் டொனால்டு ட்ரம்ப் தோல்வி அடைந்தார். இந்த தேர்​தலில் பல்​வேறு முறை​கேடு​கள் நடை​பெற்ற​தாக அவர் குற்​றம் சாட்​டி​னார். குறிப்​பாக அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருக்​கும் வெளி​நாட்​டினர், ஜனநாயக கட்சிக்கு ஆதர​வாக வாக்​களித்​த​தாக​வும் அவர்​களின் வாக்குரிமை பறிக்​கப்பட வேண்​டும் என்​றும் அவர் கூறி​னார்.

கடந்த 2024-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்​தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி வெற்று மீண்​டும் அதிப​ராக பதவி​யேற்​றார். அவரது அறி​வுரைப்​படி அமெரிக்க தேர்​தல் நடை​முறை​களை ஒழுங்குபடுத்த, “சேவ் அமெரிக்கா ஆக்ட்” என்ற மசோதா வரையறுக்​கப்​பட்டு உள்​ளது. கடந்த பிப்​ர​வரி​யில் “சேவ் அமெரிக்கா ஆக்ட்” மசோதா அமெரிக்க நாடாளு​மன்​றத்​தின் மக்கள் பிர​தி​நி​தி​கள் அவை​யில் நிறைவேற்​றப்​பட்​டது. ஆனால் செனட் அவை​யில் மசோதா முடங்கி கிடக்​கிறது. இந்த மசோதாவுக்கு பிர​தான எதிர்க்​கட்​சி​யான ஜனநாயக கட்சி கடும் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கிறது.

புதிய மசோதா விதி​கள்

புதிய மசோதா விதி​களின்​படி அமெரிக்க வாக்​காளர்​கள் அனை​வருக்​கும் புகைப்​படத்​துடன்​கூடிய வாக்​காளர் அடை​யாள அட்டை வழங்​கப்பட வேண்​டும். அமெரிக்க மக்​கள் தேர்​தலில் வாக்களிக்கச் செல்​லும்​போது குடி​யுரிமை சான்றை கண்​டிப்​பாக காண்​பிக்க வேண்​டும். வெளி​நாட்​டினரை அடை​யாளம் கண்​டு​பிடித்து அவர்​கள் வாக்​களிக்க தடை விதிக்க வேண்​டும். இ-மெயில் வாக்​களிப்பு நடை​முறை​களை கடுமை​யாக்க வேண்​டும் என்பன உள்​ளிட்ட பல்​வேறு அம்​சங்​கள் மசோ​தா​வில் இடம்​பெற்று உள்​ளன.

இந்த சூழலில் “சேவ் அமெரிக்கா ஆக்ட்” மசோ​தாவை செனட் அவை​யில் நிறைவேற்ற அதிபர் ட்ரம்ப் தீவிர முயற்சி மேற்​கொண்டு வரு​கிறார். இதுதொடர்​பாக சமூக வலை​தளத்​தில் அவர் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: இந்த மாத தொடக்​கத்​தில் இந்​திய தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் எங்​கள் நிர்​வாகத்​திடம் ஒரு கேள்​வியை எழுப்​பி​னார். புகைப்பட அடை​யாள அட்டை இல்​லாமல் அமெரிக்​கா​வில் எப்​படி தேர்​தல் நடத்​தப்​படு​கிறது என்று அவர் கேள்வி கேட்​டார்.

இந்​தி​யா​வில் கடைசி​யாக நடத்​தப்​பட்ட தேர்​தலில் 64.60 கோடி பேர் வாக்​குரிமை பெற்​றிருந்​தனர். இதில் ஒரு சதவீதத்​துக்​கும் குறை​வான மக்​களே மெயில் மூலம் வாக்​களித்​தனர். ஒவ்​வொரு இந்​தி​யரும் புகைப்​படத்​துடன்​கூடிய வாக்​காளர் அட்​டையை வைத்​துள்​ளனர். இந்த நேரத்​தில் “சேவ் அமெரிக்கா ஆக்ட்” மசோ​தாவை நாமும் உடனடி​யாக நிறைவேற்ற வேண்​டியது அவசி​யம். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

இந்​திய தேர்​தல் நடை​முறையை பா​ராட்​டி​யுள்ள அதிபர் ட்ரம்ப், இதே பாணி​யில் அமெரிக்​கா​விலும் தேர்​தல் நடத்​தப்​பட வேண்டும்​ என்​று விருப்​பம்​ தெரி​வித்​திருக்​கிறார்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply