மேட்டூர் அணை நீர்மட்டம் 54 அடியாக குறைந்துள்ள நிலையில், சேலம் உள்பட 12 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
கடந்த ஆண்டை ஒப்பிட்டு பார்க்கும்போது, இந்த ஆண்டு அணையின் நீர் இருப்பு மிகவும் குறைவாக உள்ளது.
கடந்த ஆண்டு அணையின் நீர்மட்டம் 102 அடியாக இருந்தது.
தற்போது நிலவரப்படி 51.32 அடியாக இருக்கிறது.
நீர்வரத்து வினாடிக்கு 57 கனஅடியாக குறைந்துள்ள நிலையில், குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,200 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கடந்தாண்டில் இருந்த இருப்பை விட இந்த ஆண்டு அணை நீர் இருப்பு 50 சதவீதம் குறைவாகவே உள்ளது.
தென்மேற்கு பருவ மழையானது ஜூன் மாதத்திற்கு முன்னதாகவே தொடங்கினால் மட்டுமே பாசனம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். தற்போதை நிலையில் அணையின் நீர் இருப்பு கவலைக்குரியதாகவே இருக்கிறது.