மதுபான கொள்கை முறைக்கேடு வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் டெல்லி முதலைமைச்சர் மேல் முறையீடு செய்தார்.
அரசியல்வாதி என்பதற்காக அவருக்கு சலுகை காட்ட முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்தது.
இதுகுறித்து அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள மனுவில், மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 100 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. லஞ்சம் அளித்தவருக்கு 195 கோடி ரூபாய் லாபம் கிடைத்திடும் வகையில் , அவருக்கு சாதகமாக கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வலுவான ஆதாரம் இருந்த காரணத்தினால் மட்டுமே கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். எனவே அரசியல்வாதி என்பதால் அவருக்கு சலுகை காட்ட முடியாது. மதுபான கொள்கை முறைகேடு நடந்த போது கெஜ்ரிவால் 170 மொபைல் போன்களை பயன்படுத்தியுள்ளார். அவருடன் சேர்ந்து 36 பேர் சேர்ந்து அதனை அழித்துள்ளனர். கெஜ்ரிவாலிடம் விசாரணை மேற்கொள்ளும்போது தான் பயன்படுத்தும் மொபைல்போனில் கடவுச்சொல்லையும் சொல்லாமல், விசாரணைக்கும் ஒத்துழைப்பு வழங்குவது கிடையாது. ஆவணங்களில் உள்ளவற்றுக்கு முரணாக பதில் அளித்து வருகிறார்.’’ என்று தெரிவித்துள்ளது.