புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள டி.வி.நகரைச் சேர்ந்த செல்வநாதன் என்பவரின் மூத்த மகன்தான் ஹேமச்சந்திரன்..
26 வயதான ஹேமச்சந்திரன் பிஎஸ்சி ஐடி முடித்து விட்டு டிசைனிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார். உடல் எடை அதிகமிருந்த காரணத்தினால் பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனைகளைப் பெற்று வந்துள்ளார்.
அங்கு உடல் எடையை குறைப்பதற்காக அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட 10 நிமிடங்களில் மாரடைப்பு காரணமாக ஹேமசந்திரன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால் ஹேமசந்திரன் இறப்பில் மர்மம் இருப்பதாகக் கூறி மருத்துவமனை மீது அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு ஆறுதலளித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
உடல் எடையைக் குறைக்கச் சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது