தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது: இந்தியாவில் தகவல் தொழில்நுட்பப் புரட்சி, இளைஞர்களுக்கு வாக்களிக்கும் வயது குறைப்பு, பஞ்சாயத்துராஜ் சட்டத் திருத்தம் உள்ளிட்ட பலவரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்களைக் கொண்டு வந்தவர் ராஜீவ்காந்தி.
அவரது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில் ஆகஸ்ட் 20-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் அமைப்புப் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், தமிழகப் பொறுப்பாளர் குலாம் அகமது மிர், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர். நிர்வாகிகள் அனைவரும் இதில் தவறாமல் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

