கிரிக்​கெட் வீரர்​களுக்கு முன்​மா​திரி​யாக இருக்​கிறார் விராட் கோலி: விவிஎஸ் லஷ்மண் புகழாரம்

Priya
628 Views
2 Min Read

கிரிக்​கெட் வீரர்​களுக்கு முன்​மா​திரி​யாக இருக்கிறார் இந்​திய கிரிக்​கெட் அணி வீரர் விராட் கோலி என்று இந்​திய அணி​யின் முன்​னாள் வீரரும், பெங்​களூரு​விலுள்ள பிசிசிஐ திறன்​மிகு பயிற்சி மைய (சிஓஇ) தலை​வரு​மான விவிஎஸ் லஷ்மண் புகழாரம் சூட்​டி​யுள்​ளார்.

பெங்​களூரு​வில் நேற்று நடை​பெற்ற செய்​தி​யாளர்​கள் சந்​திப்​பில் விவிஎஸ் லஷ்மண் கூறிய​தாவது:

இந்​திய அணி​யின் நட்​சத்​திர பேட்​ஸ்​மே​னாக இருக்​கும் விராட் கோலி ஒரு சிறந்த தொழில்​முறை வீர​ராகத் திகழ்​கிறார். அதில் எந்​த​வித சந்​தேக​மும் இல்​லை. விராட் கோலி, தனக்​கென சில மிக உயர்ந்த கொள்​கைகளை வகுத்​துக் கொண்டு அதன்​படி களத்​தில் செயல்​படு​கிறார். ஒவ்​வொரு போட்​டி​யிலும் தனது இலக்​கை​யும், கொள்​கைகளை​யும் எட்ட முயற்​சிப்​ப​தன் மூலம் இளம் கிரிக்​கெட் வீரர்​களுக்​கும் சக வீரர்​களுக்​கும் எடுத்​துக்​காட்​டாக இருக்​கிறார். அணி​யின் மற்ற வீரர்​களும் தன்​னைப்​போல செயல்பட வேண்டுமென ஊக்​கமளித்து வரு​கிறார். அனைத்து கிரிக்​கெட் வீரர்​களுக்​கும் அவர் ஒரு முன்​மா​திரி​யாக இருக்​கிறார்.

விராட் கோலி ஒரு சிறந்த தொழில்​முறை வீரர் என்​ப​தில் சந்​தேகமே இல்​லை. அவர் தனக்​கென வகுத்​துக்​கொள்​ளும் தரநிலைகளை, எந்த அணிக்​காக விளை​யாடி​னாலும் ஒவ்​வொரு முறை​யும் பூர்த்தி செய்ய அவர் முயற்​சித்து வரு​கிறார்.

அதனால்​தான் பல இளைஞர்​களும், வீரர்​களும் விராட் கோலியை பின்​பற்ற விரும்​பு​கின்​றனர் என்று நான் நினைக்​கிறேன்.

தான் களமிறங்​கும் ஒவ்​வொரு போட்​டி​யிலும் தனது முழு திறனையும் வெளிப்​படுத்த விராட் கோலி நினைக்​கிறார். களத்தில் அவர் எப்​போதுமே புதி​தாக தோன்​றுகிறார். அவர் உற்சாக​மாக செயல்​படு​வது மட்​டுமல்​லாமல் களத்​தில் சக வீரர்களை​யும் ஊக்​கு​வித்து அவர்​களை சிறந்து செயல்பட வைக்கிறார்.

காயங்​கள் ஒரு கிரிக்​கெட் வீரரின் வாழ்க்​கை​யில் தவிர்க்க முடி​யாத ஒரு பகு​தி​யாக இருக்​கின்​றன. இதில் யாரை​யும் நாம் குறை சொல்ல முடி​யாது. வீரர்​கள் காயம் அடைவது தொடர்​பாக யார் மீதாவது பழிசுமத்​து​வதை விட்​டு​விட்​டு, வீரர்​களைக் கவன​மாகக் கண்​காணிப்​ப​தி​லும் நிர்​வகிப்​ப​தி​லும் முன்​னுரிமை அளிக்​கப்பட வேண்​டும்.

இந்​திய அணி வீரர்​கள் ஜஸ்​பிரித் பும்​ரா, சாய் சுதர்​சன், ஹர்​ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்​டி, வாஷிங்​டன் சுந்​தர் ஆகியோர் அண்​மை​யில் காயமடைந்​து, உடல் தகுதி தொடர்​பான சிக்​கல்​களை எதிர்​கொண்டு வரு​கின்​றனர். காயம் காரண​மாக அவர்​களால் அணி​யில் விளை​யாட முடி​யாத நிலை ஏற்​பட்​டுள்​ளது. அவர்​களுக்​குத் தேவை​யான சிகிச்​சைக்​கள், பயிற்​சிகள் அளிக்​கும் மைய​மாக பெங்​களூரு திறன்​மிகு மையம் செயல்​பட்டு வரு​கிறது. பெங்​களூரு சிஓஇ மைய​மானது, வீரர்​களை வெறும் காயத்​திலிருந்து மீட்​கும் மைய​மாக மட்​டுமல்​லாமல், கிரிக்​கெட் வீரர்​கள் களத்​தில் சிறந்து விளங்க உதவுவ​தில் பெரிய பங்கு வகிக்​கிறது. இவ்​வாறு விவிஎஸ் லஷ்மண் தெரி​வித்​தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply