தவெக அரசின் முதல் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன், சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். அதில் கவனம் ஈர்த்த அம்சங்கள்:ரூ.2 ஆயிரம் கோடியில் அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி திட்டம்அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர் தங்கும் விடுதி வசதிகளை மேம்படுத்த ரூ.10 கோடி ஆரம்ப மூலதனத்துடன் தமிழ்நாடு மாணவர் தங்கும் விடுதி மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனம் அமைக்கப்படும்.இதன் மூலம், ரூ.3,200 கோடி மதிப்பீட்டில் அரசு – தனியார் கூட்டு முயற்சி திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் படுக்கை வசதிகளுடன் 200 ஒருங்கிணைந்த மாணவர் விடுதிகள் கட்டப்படும். 2027-28-ம் கல்வி ஆண்டில் மதுரையில் சீர்மிகு சிறப்பு சட்டப்பள்ளி தரத்தில் மேம்பட்ட சட்டக்கல்வி வழங்க 300 மாணவர்களுடன் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி தொடங்கப்படும். பட்ஜெட்டில் உயர்கல்வித் துறைக்கு ரூ.8,393 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.‘சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ்’ – அரசுப் பள்ளிகளில் தூய்மை பராமரிப்புக்கு புதிய திட்டம்அரசுப் பள்ளிகளில் ‘சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ்’ (Super Clean, Super Campus) என்ற புதிய திட்டத்தின்கீழ் தினசரி தூய்மை பணிகள், குடிநீர் வசதிகள், கழிப்பறைகள் பராமரிப்பு மற்றும் பள்ளி வளாகங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு உறுதிசெய்யப்படும். முதல்கட்6டமாக 10 ஆயிரம் பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக பட்ஜெட்டில் ரூ.139 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அரசுப் பள்ளிகளை நவீனப்படுத்தும் நோக்கில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காக ‘ஒரு பள்ளி நிறைவு திட்டம்’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இத்திட்டம் 2,514 தொடக்கப் பள்ளிகள், 365 நடுநிலைப் பள்ளிகள், 855 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 3,734 பள்ளிகளில் ரூ.2,132 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். இதற்காக பட்ஜெட்டில் ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் இருந்து வரும் கல்வித் திறன்மிக்க மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கும் நோக்கில் பெருந்தலைவர் ‘காமராஜர் சிறப்புப் பள்ளிகள்’ என்ற பெயரில் நவீன உண்டு உறைவிட பள்ளிகள் நிறுவப்படும். 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பயிலும் இந்த பள்ளிகளில் கல்வி, உணவு, தங்குமிடம், பாடப்புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்படும். இப்பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.125 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளி பாடத்திட்டத்தை மறுசீரமைக்க ரூ.25 கோடி ஒதுக்கப்படுகிறது.11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.277 கோடி செலவில் ஹெல்மெட் வசதியுடன் நவீன சைக்கிள்அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் 11-ம் வகுப்பு பயிலும் சுமார் 5.32 லட்சம் மாணவர்களுக்கு ரூ.277 கோடி மதிப்பீட்டில் ஹெல்மெட் மற்றும் வாட்டர் பாட்டில் வசதியுடன் கூடிய நவீன பிராண்டட் சைக்கிள் வழங்கப்பட உள்ளது. தன்னை உயிராக நேசிக்கும் ஜென்-ஸி தலைமுறையை தலைசிறந்த தலைமுறையாக வளர்த்தெடுக்க வேண்டும் என்பதில் தமிழக முதல்வர் உறுதியாக உள்ளார். அதன் வெளிப்பாடே இந்த மேம்படுத்தப்பட்ட செயல்திட்டம். பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.44,527 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.டிஜிட்டல் நூலகங்கள்அரசு பொது நூலகங்களை மாநில அளவிலான டிஜிட்டல் நூலகங்களாக மறுவடிவமைப்பு செய்வதன் மூலம் டிஜிட்டல் அறிவு, ஒற்றை உறுப்பினர் சேர்க்கை, 24 மணிநேர இணைய வசதி, கைபேசி மூலம் அணுகும் வசதி, டிஜிட்டல் உள்ளடக்கம், இலவச வை-பை வசதி போன்ற வசதிகளை ஏற்படுத்த முடியும். அந்த வகையில் பொது நூலகங்களை மறுவடிவமைப்பதற்கு ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.‘சிங்கப்பெண்’ அதிரடிப் படைக்கு ரூ.354 கோடிசிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு தேவையான காவலர்கள், கட்டமைப்பு வசதிகள், உபகரணங்கள், பயிற்சி மற்றும்செயல்பாட்டுத் தேவைகளுக்காக ரூ.354 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.போதை ‘மறுவாழ்வு நிதி’ போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க, சட்டத்தை கடுமையாக அமல்படுத்துவதுடன், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. போதைப் பொருள் தொடர்பான குற்றங்களைக் கண்டறிந்து, கடும் நடவடிக்கை எடுப்பதற்காக, மாவட்டத்துக்கு ஓர் அலகு வீதம் 37 அலகுகள், நகர்ப்புறங்களில் 28 அலகுகள் என மொத்தம் 65 ‘போதைப் பொருள் தடுப்புப் பணிக் குழு’ அலகுகள் அமைக்கப்பட்டுள்ளன.போதைப் பொருள் இல்லாத தமிழகத்தை உறுதிசெய்யும் நோக்கில், ‘மறுவாழ்வு நிதி’ உருவாக்கப்படுகிறது. இந்த நிதிக்காக ரூ.70 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. போதைப் பொருள் மற்றும் போதைப் பழக்கத்தில் இருந்துவிடுபடவும், அதில் இருந்து மீண்டு வரவும், உதவி தேவைப்படுவோருக்கு மறுவாழ்வு அளிப்பதற்காகவே இந்த நிதி பயன்படுத்தப்படும்.அம்பேத்கர் உதவித் தொகைபுகழ்பெற்ற சர்வதேச பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பயனடையும் வகையில் ‘அண்ணல் அம்பேத்கர் அயல் நாட்டுக் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ்ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக ரூ.36 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. நடப்பாண்டில், 362 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.131 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
தமிழக பட்ஜெட் 2026-27: வெற்றி மடிக்கணினி முதல் நவீன சைக்கிள் வரை
Most Read
- Advertisement -

Recent Posts
- குறுதானிய சாகுபடி பரப்பை இருமடங்காக்க ரூ.7 கோடியில் ‘தமிழ்நாடு குறுதானிய இயக்கம்’
- ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதுமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு
- இண்டிகோ, ஜெப்டோ உள்ளிட்ட 9 நிறுவனங்களுக்கு அபராதம்
- ரூ.2,000+ யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்க மத்திய அரசு பரிசீலனை
- தங்கம் பவுனுக்கு ரூ.2,160 உயர்வு: தொடர்ந்து 2-வது நாளாக விலை அதிகரிப்பு
Recent Comments
No comments to show.
