நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இந்தியாவில் வேகமாக வளரும் பொருளாதாரம்: மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் தகவல்

Priya
696 Views
2 Min Read

உலக பொருளா​தார நெருக்​கடிகளுக்கு மத்​தி​யிலும் இந்​திய பொருளா​தா​ரம் மிக வேக​மாக வளர்ந்து வரு​கிறது என மத்​திய அரசின் தலை​மைப் பொருளா​தார ஆலோ​சகர் வி.அனந்த நாகேஸ்​வரன் தெரி​வித்​தார்.

சென்னை கிண்​டி​யில் இந்​தி​யத் தொழில் கூட்​டமைப்​பின் மாநாடு நேற்று நடை​பெற்​றது. இதில் அவர் பங்கேற்று பேசி​ய​தாவது: உலகில் பல நாடு​கள் பொருளா​தார பின்​னடைவை சந்​தித்து வரும் நிலை​யில், இந்தியா கடந்த ஆண்​டில் 7.7 சதவீத வளர்ச்​சியை அடைந்​துள்​ளது.

இது வெறும் அதிர்​ஷ்டத்​தால் கிடைத்​தது அல்ல. உள்​கட்​டமைப்​புக்​காக மத்​திய அரசு பல லட்​சம் கோடிகளை முதலீடு செய்​ததே முதன்மை காரண​மாகும். சாலைகள், மின்​சார வசதி போல தண்​ணீரை​யும் ஒரு முக்​கிய உள்​கட்​டமைப்​பாகக் கருத வேண்​டும். 2019-ம் ஆண்டு சென்னை சந்​தித்த தண்​ணீர் பஞ்​சத்தை மறந்​து​விடக் கூடாது.

நீர்​நிலைகளை ஆக்​கிரமித்​துக் கட்​டிடங்​கள் கட்​டு​வ​தால்​தான் மழைக்​காலத்​தில் வெள்​ள​மும், கோடை​யில் வறட்​சி​யும் ஏற்​படு​கிறது. தண்​ணீரை இலவச​மாகக் கொடுக்​கும்​போது, அது அபரிமித​மாக இருப்​ப​தாக கருதி மக்​கள் அதை வீணாக்​கு​கிறார்​கள்.

இரண்​டா​யிரம் ஆண்​டு​களுக்கு முன்பே திரு​வள்​ளுவர் ‘வான்​சிறப்​பு’ அதி​காரத்​தில் “நீரின்று அமை​யாது உலகு” என நீரின் முக்​கி​யத்​து​வத்​தைக் கூறி​யுள்​ளார். அதன்​படி, தண்​ணீரைச் சேமித்​து, அதற்​கான சரி​யான கட்​ட​ணத்தை நேர்​மை​யாக வசூலித்​து, நிலை​யான கட்​டமைப்பை உரு​வாக்​கி​னால் மட்​டுமே அடுத்த தலை​முறைக்கு நாம் ஒரு பாது​காப்​பான நாட்டை விட்​டுச்செல்ல முடி​யும்.

மேற்கு ஆசி​யா​வில் நடை​பெற்று வரும் அமெரிக்கா – ஈரான் இடையி​லான போர், உலகப் பொருளா​தா​ரத்​தில் பெரும் தாக்​கத்தை ஏற்​படுத்​தின. இந்​தப் போர் காரண​மாக, கச்சா எண்​ணெய் விலை கடுமை​யாக உயர்ந்து ஒரு பீப்​பாய்க்கு 113 டாலர் வரை தொட்​டது.

இதனால், இந்​தி​யா​வுக்கு தேவை​யான கச்சா எண்​ணெய், இயற்கை எரி​வாயு மற்​றும் உரங்​கள் வந்து சேரு​வ​தி​லும் வளை​குடா நாடு​களில் பணிபுரி​யும் இந்​தி​யர்​கள் தாயகத்​துக்கு அனுப்​பும் பண அளவிலும் நிச்​சயமற்ற தன்மை நில​வியது. போர் அச்​சத்​தால் உலகெங்​கிலும் உள்ள முதலீடு​கள் பாது​காப்​பான நாடு​களை நோக்கி ஓடின.

ஆனால், போர் அச்​சுறுத்​தல்​களுக்கு மத்​தி​யிலும் இந்​தி​யப் பொருளா​தா​ரம் எந்த பாதிப்​புமின்றி முன்​னேறியது. கச்சா எண்​ணெய் விலை உயர்ந்​த​போ​தி​லும், இந்​தி​யா​வின் பொருளா​தா​ரம் சிறப்​பான வளர்ச்​சியை பதிவு செய்​தது. ஜூலை மாத ஜிஎஸ்டி வசூலும் 2.1 லட்​சம் கோடியைத் தாண்​டி சாதனை படைத்​துள்​ளது. இவ்​வாறு அவர்​ பேசி​னார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply