“சினி​மா​வில் அதிக பெண் இயக்குநர்​கள்” – மாளவிகா மோகனன் விருப்பம்

Priya
878 Views
1 Min Read

இந்​திய சினி​மா​வில் பெண்​களுக்கு வலு​வான கதா​பாத்​திரங்​கள் வேண்​டும் என்​றால் அதி​க​மான பெண் இயக்​குநர்​களும் பெண் திரைக்​கதை ஆசிரியர்​களும் வர வேண்​டும் என்று மாளவிகா மோக​னன் வலி​யுறுத்​தி​ உள்​ளார்.

இதுபற்றி அவர் கூறும்​போது, “திரை​யில் பெண்​களின் பிரதிநிதித்து​வம் சிறப்​பாக மாற வேண்​டும் என்​றால் நடிகைகளால் மட்​டுமே ஏற்​படுத்த முடி​யாது. அதி​க​மான பெண்கள், இயக்​குநர்​களாகவும், எழுத்​தாளர்​களாக​வும் வர வேண்டும். அவர்​களால்​ தான் தங்களுக்கே உரிய பார்​வை​யுடன் புதிய கதைகளைச் சொல்ல முடியும். தங்​களு​டைய அனுபவங்களைக் கதைகளில் கொண்டு வரு​வார்​கள்.

எனக்​குக் கதை​யில் தாக்​கத்தை ஏற்படுத்​தும், வலிமை​யான பெண் கதா​பாத்​திரங்​களில் நடிக்​கவே விருப்​பம். அப்​படிப்​பட்ட கதைகள் அதி​கம் உரு​வாக வேண்​டும். அதி​க​மான பெண் இயக்குநர்​கள்​ வந்​தால்​, இந்​தி​யா​விலும்​ குவென்​டின்​ டரான்டினோவின்​ ‘கில்​ பில்​’ போன்​ற சிறந்​த ஆக்​ஷன் திரைப்படத்தை உரு​வாக்க முடியும்” என்​றார்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply