மாணவர்கள் போராட்டம் நடத்த தடை: டெல்லி பல்கலை.க்கு ராகுல் காந்தி கண்டனம்

Priya
45 Views
1 Min Read

கல்வி அமைச்சர் தர்மேந்aதிர பிரதான் பதவி விலக வலியுறுத்தி ஜந்தர் மந்தரில் நடக்கும் போராட்டம் உட்பட சட்டவிரோதக் கூட்டங்களில் மாணவர்கள் யாரும் பங்கேற்கக் கூடாது என்று டெல்லி பல்கலைக்கழகம் அறிவுறுத்தல் வெளியிட்டிருந்தது.

இதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அளித்துள்ள பதிலில், “மாணவர்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளை பயன்படுத்துவதற்காக அவர்களை மிரட்ட உங்களுக்கு எவ்வளவு துணிச்சல்? தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள், காலம் வரும்போது இதற்கெல்லாம் நீங்கள் பொறுப்பேற்க வேண்டியிருக்கும்” என்று கூறியுள்ளார்.

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகமும் இதேபோல் அறிவிப்பை வெளியிட்டது. போராட்டம் நடத்திவரும் மாணவர்கள் மீது ‘பெல்லட்’ குண்டுகளை பயன்படுத்தவில்லை என காவல் துறையும் அரசும் மறுத்துள்ளன. இதுகுறித்து ராகுல் கூறும்போது, “பொய் சொல்வதை நிறுத்துங்கள்” என்று மத்திய அரசை கண்டித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply