விஜயகாந்த் பாதையில் அன்னதான சேவை தொடரும்: பிரேமலதா அறிவிப்பு

Priya
14 Views
1 Min Read

தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா வெளி​யிட்​டுள்ள ‘எக்​ஸ்’ பக்​கத்​தில், “விஜயகாந்த் நினை​வும், ஆசீர்​வாத​மும் என்​றும் நம்​முடன் இருக்​கிறது. அவர் காட்​டிய மனிதநேயப் பாதை​யில், ஒவ்​வொரு நாளும் அன்​ன​தான சேவையை நாம் தொடர்ச்சியாக செய்து வரு​கிறோம்.

மக்​களுக்​காகவே வாழ்ந்த விஜய​காந்​தின் லட்​சி​யத்தை என்​றும் காப்​போம். விஜ​காந்த் நினை​வைப் போற்​றும் வகை​யில், அவரது ஆசீர்​வாதத்​துடன் சென்னை கோயம்​பேட்​டில் உள்ள கேப்​டன் ஆலயத்​தில் அன்​ன​தான சேவை தொடர்ந்து நடை​பெற்று வரு​கிறது.

‘மக்​களுக்​காகவே விஜய​காந்த்​.. மக்​களால் விஜய​காந்த்​.. மக்​களுக்​காகவே வாழ்ந்​தவர் விஜய​காந்த்’ என்ற உயரிய எண்​ணத்தை நெஞ்​சில் சுமந்​து, இல்​லாதோருக்​கும் எளியோ​ருக்​கும் உதவும் இந்த தர்​மப் பணியை ஒவ்​வொரு நாளும் கேப்​டன் ஆலயம் தொடர்ந்து செய்​யும்” என்று தெரி​வித்​துள்​ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply