இ20 பெட்ரோலுக்கு 52% பேர் எதிர்ப்பு, 22% ஆதரவு; வாகனங்கள் பழுதாகும் என 55% பேர் அச்சம்

Priya
19 Views
1 Min Read

நாடு முழு​வதும் இப்​போது 20% எத்​த​னால் கலக்கப்பட்ட (இ20) பெட்​ரோல் விற்​பனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரி​வித்து வருகின்​றனர். இதுகுறித்து ஜூலை 8 மற்​றும் 9 ஆகிய தேதி​களில் ‘சி-வோட்​டர்’ அமைப்பு நாடு தழு​விய அளவில் 1,641 பேரிடம் கருத்துக் ​கணிப்பு நடத்​தி​யது.

அமெரிக்​கா- ஈ​ரான் போரி​னால் கச்சா எண்​ணெய் விநி​யோகம் பாதிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், இந்​தி​யா​வின் இறக்​குமதி சார்​பைக் குறைக்க எத்​த​னால் கலப்பு உதவுமா என்​பது உட்பட 12 கேள்வி​கள் இந்த ஆய்​வில் கேட்​கப்​பட்​டன.

கருத்​துக் கணிப்​பில் கிடைத்த விவரங்​கள் வரு​மாறு: கருத்து கணிப்​பில் பங்​கேற்​றவர்​களில் 52 % பேர் எத்​த​னால் கலப்​புத் திட்டத்​துக்கு எதிர்ப்பு தெரி​வித்​தனர். 25.9 % பேர் கருத்து தெரிவிக்க விரும்​ப​வில்லை என்​றும் 22 % பேர் ஆதரிப்​ப​தாக​வும் தெரி​வித்​தனர். 60 %-க்​கும் அதி​க​மானவர்​கள், போதிய ஆராய்ச்சி இல்​லாமல் இந்​தத் திட்​டம் அவசர​மாகச் செயல்​படுத்​தப்​படு​வ​தாக நம்​பு​கின்​றனர்.

வாக​னப் பழுது (52.8 %) மற்​றும் மைலேஜ் குறைவு (54.2 %) காரணமாக இ20 எரிபொருளைப் பயன்​படுத்த விரும்​ப​வில்லை என 55 %-க்​கும் அதி​க​மானோர் தெரி​வித்​தனர். எத்​த​னால் கலந்த பெட்​ரோல் மற்​றும் சாதாரண பெட்​ரோல் ஆகிய இரண்​டை​யும் தனித்​தனி​யாக விற்​பனை செய்ய வேண்​டும் என்று 76 % பேர் வலியுறுத்தி உள்​ளனர்.

எத்​த​னால் பெட்​ரோலின் விலை சாதாரண பெட்​ரோலை விடக் குறை​வாக இருக்க வேண்​டும் என்று பெரும்​பாலானோர் கருத்து தெரி​வித்​துள்​ளனர். இ 20 எரிபொருளைக் கட்​டாய​மாக்​கு​வது பழைய வாக​னங்​களை வைத்​திருப்​பவர்​களுக்கு இழைக்​கப்​படும் அநீதி என்று 56.3 % பேர் (இதில் 49.2 % என்டிஏ வாக்​காளர்​கள்) கருதுகின்​றனர். இ20 பெட்​ரோல் காரண​மாக நாட்​டின் எரிபொருள் இறக்​குமதி செலவு குறைந்​து, எரிசக்தி பாது​காப்பு அதி​கரிக்​கும் என 43 % பாஜக வாக்​காளர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply