“பெண்​களைக் கவர்ச்​சிப் பொருளாக சித்​தரிப்​பது ஆணாதிக்க சிந்​தனை” – ஹூமா குரேஷி விமர்சனம்

Priya
24 Views
1 Min Read

இந்தி நடிகை ஹூமா குரேஷி, தமிழில் ரஜினி​காந்​தின் ‘காலா’, அஜித்தின் ‘வலிமை’ ஆகிய படங்​களில் நடித்​துள்​ளார். அடுத்து ‘டாக்​ஸிக்’ படத்​தில் நடித்​துள்​ளார். அவர் நடித்​துள்ள ‘பேபி டூ டை டூ’ என்ற இந்​திப் படம் சமீபத்​தில் வெளி​யாகி​யுள்​ளது. இதில் அவர் காதுகேட்​காத, வாய்​பேச முடி​யாத ஒப்​பந்​தக் கொலை​யாளி​யாக நடித்​திருக்​கிறார்.

இப்​படம் பற்றி பேசிய அவர், “இப்​படத்​தின் ‘பேபி’ கதா​பாத்​திரம் சாதாரண தோற்​றம் கொண்ட, மும்பை புறநகர் ரயி​லில் பயணிக்கும் ஒரு பெண்​ணைப் போலவே இருக்​கும். அதுவே அந்தக் கதா​பாத்​திரத்​தைத் தனித்​து​வ​மாக்​கு​கிறது. பெண்​களை இயல்​பானவர்​களாக​வும், வலிமை​யானவர்​களாக​வும் சித்​தரிக்​கும் கதா​பாத்​திரங்​கள் அதி​கம் எழுதப்பட வேண்​டும்.

பெண் கொலை​யாளி​கள் எப்​போதும் ஏன் இறுக்​க​மான தோல் ஆடைகள், உயரமான ஹீல்ஸ் அணிந்​து, கவர்ச்​சி​யாகவே தோன்ற வேண்​டும் ? அது யதார்த்​தமல்ல, பெண்​களை ஆணா​திக்​கக் கண்ணோட்​டத்​தில் பார்க்​கும் மனப்​பான்​மை​யில் இருந்​து ​தான் அந்​தச் சித்​தரிப்பு உரு​வாகிறது. சக்தி வாய்ந்​தவர்​களாகக் காட்டப்படுவதற்​குப் பெண்​களைக் கவர்ச்​சிப் பொருளாகச் சித்தரிக்க வேண்டிய அவசி​யமில்​லை. அவர்​களை இயல்பானவர்களாகவே காட்டலாம்” என்​றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply