தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 குறைவு…

Priya
40 Views
1 Min Read

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று (ஜூலை 14) பவுனுக்கு ரூ.400 என குறைந்துள்ளது. வெள்ளி விலையை பொறுத்தவரையில் இன்று கிலோவுக்கு ரூ.5,000 என குறைந்துள்ளது.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. இப்போது அமெரிக்கா மற்றும் ஈரான் இடையில் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளதால், அதன் தாக்கம் உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது.

கடந்த மே மாதம் தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. அதையடுத்து தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த சனிக்கிழமை அன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.400, நேற்று (திங்கட்கிழமை) அன்று பவுனுக்கு ரூ.800 என விலை குறைந்தது.

இன்றைய விலை நிலவரம்

இந்த சூழலில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. இன்று காலை சென்னையில் வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,150-க்கும், பவுனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,05,200-க்கும் விற்பனையாகிறது.

24 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.54 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,346-க்கு விற்பனையாகிறது. 18 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,970-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி இன்று கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.235-க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து, ஒரு கிலோ ரூ.2,35,000-க்கும் விற்பனையாகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply