முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை ஒட்டி சென்னை வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் இரு நாட்களுக்கு இலவச அனுமதி!

Priya
17 Views
2 Min Read

முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை ஒட்டி சென்னை வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் இரு நாட்களுக்கு இலவச அனுமதி!

தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு. 21.06.2026 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 22.06.2026 (திங்கட்கிழமை) ஆகிய நாட்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு பொதுமக்களுக்கு இலவச நுழைவு வழங்கப்படுகிறது. இலவச நுழைவுச் சீட்டுகளைப் பெறுவதற்கு. உயிரியல் பூங்காவின் இணையதளம் மூலம் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வது கட்டாயமாகும். எனவே, பார்வையாளர்கள் தங்களது இலவச நுழைவுச் சீட்டுகளை tickets.aazp.in என்ற இணையதளத்தின் மூலம் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முன்பதிவு செய்யப்பட்ட ஆன்லைன் டிக்கெட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேற்கண்ட இரண்டு நாட்களிலும் உயிரியல் பூங்கா நுழைவுச் சீட்டு கவுண்டர்களில் நேரடி (On-the-spot) டிக்கெட் முன்பதிவு வசதி இருக்காது.பார்வையாளர்களின் வசதிக்காகவும். கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காகவும். இலவச நுழைவு இரண்டு தனித்தனி நேரப் பிரிவுகளாக (காலை மற்றும் பிற்பகல்) ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் காலை நேரப் பிரிவிற்கு 10,000 ஆன்லைன் டிக்கெட்டுகளும், பிற்பகல் நேரப் பிரிவிற்கு 10,000 ஆன்லைன் டிக்கெட்டுகளும் வழங்கப்படும்.

மேற்கண்ட இரு நாட்களிலும் உயிரியல் பூங்கா காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை திறந்திருக்கும். மாலை 4.30 மணி வரை மட்டுமே பார்வையாளர்கள் பூங்காவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். நுழைவுக் கட்டணத்தைத் தவிர, பிற சேவைகளுக்கான கட்டணங்கள் நடைமுறையில் உள்ள கட்டண அட்டவணையின்படி வசூலிக்கப்படும். இந்த இரண்டு நாட்களிலும் உயிரியல் பூங்காவைச் சுற்றிப் பார்வையிடுவதற்கான மின்கல (Battery-operated) வாகன சேவையும், சிங்கம் மற்றும் மான் சஃபாரி (Lion and Deer Safari) சேவையும் இயக்கப்படாது.

மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்புத் தேவையுடைய நபர்களுக்காக மின்கல வாகன வசதி இந்த இரண்டு நாட்களிலும் இலவசமாக வழங்கப்படும்.அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், பார்வையாளர்கள் சிரமமின்றி சுற்றிப் பார்க்க போதிய இடவசதி ஏற்படுத்தவும், அத்தியாவசிய வசதிகள் மற்றும் பிற சேவைகளை திறம்பட நிர்வகிக்கவும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் பூங்கா விலங்குகளின் நலன், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் ஒவ்வொரு பார்வையாளருக்கும் பாதுகாப்பான, நுழைவு வசதியான மற்றும் பயனுள்ள அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகின்றன.

குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் உயிரியல் பூங்காக்களைப் பார்வையிட்டு, வனவிலங்குகளை நேரடியாகக் கண்டு அனுபவித்து, உயிரினப் பன்முகத்தன்மை, வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ள ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த சிறப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களிடையே வனவிலங்குகள் குறித்த விழிப்புணர்வையும், இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply