“உழைக்கும் மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்து ஏதுமில்லை; ஆளுநர் உரை ஏமாற்றம்” – இந்திய கம்யூனிஸ்ட்

Priya
11 Views
1 Min Read

தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநரின் உரை ஆக்கபூர்வமாக இருப்பினும் உழைக்கும் மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை என்பது ஏமாற்றம் அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

“தொழிலாளர் நலன், சட்ட உரிமைகள், கண்ணியமான வாழ்வுக்கான ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்து ஒரு வார்த்தை கூட ஆளுநர் உரையில் இல்லை என்பதும், மத்திய அரசின் தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகள் குறித்தும் ஆளுநர் உரை அமைதி காத்திருப்பதும் பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.” எனத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ”முதல்வர் உள்ளிட்ட அமைச்சரவை பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டு, வந்தே மாதரம் பாடலுக்கு முதலிடம் வழங்கப்பட்ட மரபு மீறல் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் வழக்கம் போல முதலிடம் பெற்றது. பேரவை மரபு நிலை நாட்டப்பட்டதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply