எதிரியிடம் உயிர் பிச்சை கேட்டு வாழ்வதைவிட செத்து போவது மேல்.! விஜயபாஸ்கரை விளாசிய ஆர்.பி.உதயகுமார்

Priya
6 Views
2 Min Read

அதிகாரத்தை கொடுத்த கட்சியை காட்டி கொடுத்துவிட்டு செல்பவர்கள் தங்கள் சொத்துகளை கட்சிக்கு எழுதி வைத்துவிட்டு செல்வார்களா என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார். அதிமுகவில் இருந்து விலகி இருக்கும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குறித்து விமர்சித்துள்ள ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கரின் செயல் வளர்த்த கிடா மார்பில் பாய்வது போல் ஒரு வேதனையை தலைமைக்கு ஏற்படுத்தியிருக்கிறது என்று கூறி இருக்கிறார். சுயநலத்துக்காகவும், சொத்துகளை காப்பாற்றவுமே சி.விஜயபாஸ்கர் அதிமுக-வில் இருந்து விலகி உள்ளார், மேலும் வேறு கட்சியில் சேர திட்டமிட்டுள்ளதாக சாடி உள்ளார்.

ராஜினாமா செய்து தன்னுடைய நாடகத்திற்கான விடையை சி.விஜயபாஸ்கர் கொடுத்து இருக்கிறார். விஜயபாஸ்கர் இந்த கட்சிக்கு வருவதற்கு முன்பாக இருந்த சொத்து மதிப்புகள் என்ன, இப்போது சேர்த்துள்ள முதலீடுகள் என்னென்ன? என்று கேள்வி எழுப்பி தற்போது கட்சி, பதவியை வேண்டாம் என்று சொல்பவர் அதிமுகவு-க்கு வந்தபின் அவர் சேர்த்த சொத்துகளை அதிமுக-விற்கு எழுதி வைப்பாரா என்றும் சி.விஜயபாஸ்கருக்கு, ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி இருக்கிறார். 54 ஆண்டுகள் வரலாறு கொண்ட அதிமுக தொண்டர்களை நம்பியே உள்ளது.

அதிமுக-வை காட்டி கொடுக்கும் விஜயபாஸ்கரை தொண்டர்கள் எப்படி ஏற்றுக் கொள்ளவார்கள், உண்மை தொண்டர்களின் வயிறு எரியவில்லையா.!! விஜயபாஸ்கர் 10 ஆண்டுகளாக எடப்பாடி பழனிச்சாமியின் காலை பிடித்து எத்தனை எத்தனை விஷயங்களை சாதித்திருக்கிறார். அதிமுகவில் இருந்து ஒவ்வொரும் போய் கொண்டே இருப்பீர்கள் நாங்கள் வாயை மூடி மவுனமாக இருக்க வேண்டுமா? விஜயபாஸ்கர் செயலை ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் ஆன்மா உங்களை சும்மா விடுமா.!

சொத்து இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா.! கட்சிக்கு ஒரு பிரச்சனை, தோல்வி என்று வந்தால் கட்சியை விட்டுவிட்டு ஓடி விடுவீர்களா.!! தொண்டர்கள் கொதித்து எழுந்தால் இப்படி கட்சிக்கு துரோகம் செய்வோர் எல்லோரும் நாசமாகி போவீர்கள். எதிரியிடம் சரணாகதி அடைவதை விட செத்துப்போவது மேல் இல்லையா.! எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கட்சிக்காக உழைக்கும் உண்மை தொண்டனால் தான் அதிமுக இருக்கிறது, உங்களை மாதிரி ஓடுகாலிகளை நம்பி இந்த கட்சி இல்லை என்று ஆவேசத்துடன் ஆர்.பி.உதயகுமார் பேசி இருக்கிறார். 

Share This Article
Leave a Comment

Leave a Reply