முதலமைச்சர் விஜய் மவுனம் ஏன்?.. திமுகவின் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா?… திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவு

Priya
15 Views
1 Min Read

24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்முறைகள் நடந்திருப்பதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழக ஆட்சி வந்த கடந்த மே 10ம் தேதி முதலே தினம் தினம் பாலியல் மற்றும் குற்றச்சம்பவங்கள் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே கும்மிடிப்பூண்டி அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு 3 வயது பெண் குழந்தை ஒன்று பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 12 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளது.

இது சம்பவம் பெண்கள், பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் 24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்முறைகள் நடந்திருப்பதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; “Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்” “சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்” என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா? மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு ‘கால்ஷீட்’ எப்போது?

கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? சவாலும் – சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்? மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா? இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply