பிரதமர் மோடியின் 12 ஆண்டுகால ஆட்சியில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்பு: எல்.முருகன் பெருமிதம்

Priya
138 Views
1 Min Read

‘‘பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில், கடந்த 12 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் பன்முக வறுமையிலிருந்து மீண்டுள்ளனர்’’ என, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘ஏழைகளின் நலனுக்காக 12 ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் பிரதமர் மோடி அரசு செயல்பட்டு வருகிறது.

குறிப்பாக, 25 கோடி மக்கள் பன்முக வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். 58.15 கோடி ஜன்தன் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. 44 கோடி ஆயுஷ்மான் பாரத் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

15.7 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 12 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டப்பட்டுள் ளன. 10 கோடிக்கும் மேற்பட்ட உஜ்வாலா எல்பிஜி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

4 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 2.9 கோடி குடும்பங்களுக்கு மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளது. அடல் பென்ஷன் யோஜனாவில் 9 கோடிக்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர்.

பிரதம மந்திரி பாதுகாப்பு பீமா யோஜனாவில் 58 கோடிக்கும் மேற்பட்டோர் விபத்து காப்பீட்டின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளனர்’’ என கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply