எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை முதல்வர் கட்டுப்படுத்த வேண்டும்: யாழ்ப்பாணம் மீனவர்கள் கோரிக்கை

Priya
8 Views
1 Min Read

இலங்கை கடற்​பகு​திக்​குள் எல்லை தாண்டி மீன்​பிடிக்க வரும் தமிழக மீனவர்​களை கட்​டுப்​படுத்த, தமிழக முதல்வர் விஜய்க்கு யாழ்ப்​பாணம் மீனவர்​கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து யாழ்ப்​பாணம் மாவட்ட கடற்​தொழிலா​ளர் கூட்​டுறவு சம்​மேளனத் தலை​வர் செல்​லதுரை நற்​குணம் செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்​த​தாவது: கச்​சத்​தீவு இலங்​கை​யின் சொத்​து. தங்​களு​டைய தேர்​தல் பிரச்​சா​ரத்​தின்​போது கச்​சத்​தீவை இந்​தியா மீட்க வேண்​டும் என தெரி​வித்து உள்​ளீர்​கள். இனிமேல் கச்​சத்​தீவு தொடர்​பாக உண்​மைக்கு புறம்​பாகப் பேசுவதை நாங்​கள் விரும்​ப​வில்​லை. நீங்​கள் கச்​சத்​தீவு விவ​காரத்தை கையில் எடுக்க நினைப்​பீர்​களா​யின், யாழ்ப்​பாணம் மாவட்ட மீனவர்​கள் அதற்​கான எதிர்ப்பை காட்​டு​வதற்கு தயங்​க​மாட்​டோம்.

தமிழகத்​தில் இருந்து எல்லை தாண்​டும் மீனவர்​களால் இலங்கை வடபகுதி மீனவர்​கள் தொடர்ச்​சி​யாக பாதிக்​கப்​பட்டு வரு​கின்​றனர். எங்​களது கடல் வளத்தை அழிப்​ப​தோடு, எமது மீனவர்​களின் வலைகளை​யும் நாசம் செய்​கின்​றனர்.

எனவே, இலங்கை கடற்​பகு​திக்​குள் எல்லை தாண்​டும் தமிழக மீனவர்​களை முதல்​வர் விஜய் கட்​டுப்​படுத்த வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply