சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,18,240க்கு விற்பனை!!

Priya
7 Views
1 Min Read

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,18,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவி வரும் அரசியல் மாற்றங்கள், எப்போதும் தங்கம் விலையில் எதிரொலிப்பது வழக்கம். அந்த வகையில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்படப் போவதாக வெளியாகியுள்ள தகவல்கள், உலகப் பொருளாதாரத்தை புதிய பாதையில் தள்ளியுள்ளது. இதனால் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

அதவாது நேற்று முன்தினம் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து ஒரு சவரன் ரூ.1,18,000க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 குறைந்து ஒரு கிராம் ரூ.14,750க்கு விற்பனையானது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.285க்கும், ஒரு கிலோ ரூ.2,85,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதனையடுத்து, நேற்று சென்னையில் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,18,480க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,810க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து கிராம் ரூ.290க்கும், ஒரு கிலோ ரூ.2,90,000க்கு விற்பனையானது.

Share This Article
Leave a Comment

Leave a Reply