தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்வி செல்வதற்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண் முக்கியத்துவம் வகிக்கும். இந்த மதிப்பெண்ணை வைத்தே மாணவர்களின் எதிர்கால படிப்பு நிர்ணயம் செய்யப்படும் . தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 7 ஆயிரத்து 534 மேல்நிலைப் பள்ளிகளில் படித்த, 7 லட்சத்து 72 ஆயிரத்து 360 மாணவர்களும், தனித்தேர்வர்கள் 8 ஆயிரத்து 190 பேரும் என 7 லடசத்து 80 ஆயிரத்து 550 மாணவர்கள் எழுதி உள்ளனர்.

இந்நிலையில் திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணி அளவில் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.dge.tn.gov.in மற்றும் www.tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் தங்களின் தேர்வு முடிவுகளை பார்த்து வருகின்றனர். மாணவர்கள் மற்றும் மாணவிகளின் தேர்ச்சி சதவிகம் 94.56 %. மாணவர்களை விட மாணவிகள் 4.07 சதவிகிதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி விவரங்கள்

தேர்ச்சி பெற்றவர்கள் :7,19,196 (94.56%)

மாணவியர் 3,93,890 (96.44%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாணவர்கள் 3,25,305 (92.37%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மூன்றாம் பாலினத்தவர் 1 (100%) தேர்ச்சி அடைந்துள்ளனர்

கடந்த மார்ச்- 2023 ஆம் ஆண்டு பொதுத்தேர்வில், தேர்வெழுதிய மாணாக்கர்களின் எண்ணிக்கை 8,03,385. தேர்ச்சி பெற்றோர் 7,55,451. தேர்ச்சி சதவிகிதம் 94.03%.

அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம்

மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 7532.

100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 2478.

100% தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை -397.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here