தமிழக அரசு அனுப்பிய 20 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டாவது முறையாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழக அரசு இரண்டாவது முறையாக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய 21 மசோதாக்களில் 20 மசோதாக்களை ஆளுநர் இரண்டாவது முறையாக குடியரசுத் தலைவருக்கே அனுப்பியுள்ளார்..
வேளாண் விளைபொருள் சட்ட முன்வடிவு மசோதா மட்டும் ஆளுநரிடம் உள்ளது. சிறைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பான 49 கோப்புகள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது.
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் வீரமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் மீதான வழக்குகளில் விசாரணை மேற்கொள்ளவும் அனுமதி கோரியுள்ளோம் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.