குஜராத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்த வந்தே மெட்ரோ ரயிலுக்கு தற்பொழுது நமோ பாரத் எக்ஸ்பிரஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அகமதாபாத்தில் இருந்து வந்தே மெட்ரோ ரயிலை கட்ச் மாவட்டத்தில் உள்ள பூஜ் நகருக்கு மாற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 360 கிமீ பயணிக்கும் இந்த ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து, ரயில் பயணத்தின் போது மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
நமோ பாரத் எக்ஸ்பிரஸ் 1,150 அமர்ந்து வரும் பயணிகளையும், 2,058 நிற்கும் பயணிகளையும் அதிகபட்சமாக 110 கிமீ வேகத்தில் கொண்டு செல்ல முடியும், இது கவாச் உள்ளிட்ட அதிநவீன பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.