இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பா.ஜ.,வின் பிளவுவாத கனவுகள் ஒருபோதும் பலிக்காது. இண்டியா கூட்டணி வெல்லும். மாநிலங்களுக்கு இடையே மோதலைத் தூண்டும் மலிவான உத்தியை பிரதமர் மோடி கையில் எடுத்துள்ளார். உத்தர பிரதேச மக்களை தென் மாநிலத் தலைவர்கள் அவதூறாகப் பேசுவதாக கற்பனை கதைகளை மோடி பேசுகிறார். அவர் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் செயல்படும் மக்கள் நலத்திட்டங்களை கொச்சைப்படுத்த துணிந்துள்ளார்.

பெண்களுக்கு நாள்தோறும் நன்மை தரும் விடியல் பயணத் திட்டத்தை பிரதமர் மோடி எதிர்க்கத் துணிந்துள்ளார். தற்போது அவர் பஸ்களில் இலவச பயணத்தால் மெட்ரோ ரயில்களில் கூட்டமில்லை என கூறுகிறார். மெட்ரோ 2ம் கட்டத்திற்கு நிதி தராமல் முடக்கிய பிரதமர் விடியல் பயணத்திட்டத்தின் மீது பழி போடுகிறார். அவர் நாளொரு பரப்புரை, பொழுதொரு வெறுப்பு விதை என பேசி வருகிறார். பிரதமர் மோடி பேசுவதைக் கவனித்தால், உண்மை கிலோ என்ன விலை என்று கேட்பார் என தோன்றுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here