தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் நவ.9 ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையே, சென்னையில், ஒருசில பகுதிகளில் இன்று (நவ.4) காலை லேசான சாரல் மழை பெய்தது. இந்த நிலையில், தமிழ்நட்டில் 6 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, கடலூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பிற்பகல் 1 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.