தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், அரசின் சார்பில் எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் தொடர்பாக அமைச்சர் கே.கே.எஸ் .எஸ்.ஆர். இராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது,
” இதுவரை மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அவர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும்.
இதுவரை வடகிழக்கு பருவமழையால் 31 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக கடலூரில் 6 பேர் உயிரிழப்பு.மழையால் காயமடைந்தவர்கள் 47 பேர், கால்நடைகள் இறப்பு 485, கோழிகள் 20,425 மற்றும் 1780 குடிசைகள் பாதிக்கப்பட்டுள்ளன.இதற்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் ” என தெரிவித்துள்ளார்.

