தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால், தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
ஆரஞ்சு அலெர்ட்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ,விழுப்புரம், மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் அலெர்ட்
கடலூர்,கள்ளக்குறிச்சி,நீலகிரி,திருப்பூர்,ஈரோடு,திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
பருவமழை தீவிரமடைந்து, தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர்,கள்ளக்குறிச்சி,சிவகங்கை,திருச்சி,புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ( 22-10-2025) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,புதுக்கோட்டை ,சேலம்,நாமக்கல்,பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ( 22-10-2025) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

