தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில்,சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது,
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் ஒரு வளிமண்டல கிழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
நேற்று ( 17-10-2025) தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று (18-10-2025) காலை 05:30 மணியளவில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரளா – கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி, அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 36 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வருகின்ற 21 ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும்.இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வலுபெறக்கூடும்.
இதன் காரணமாக 18-10-2025 இன்று தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும் ,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி,கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் கன முதல் மிககனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம் செங்கல்பட்டு , ஈரோடு , சேலம் ,நாமக்கல், திருப்பூர்,திண்டுக்கல்,கரூர், மதுரை,விருதுநகர்,சிவகங்கை ,தூத்துக்குடி,ராமநாதபுரம்,திருச்சி,தேனி, தென்காசி,திருநெல்வேலி ,கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புத்துள்ளது. என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.