‘மோன்தா’ புயல் அப்டேட்: நாளை தீவிர புயலாகிறது – சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு ‘மிக கனமழை’ எச்சரிக்கை!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மோன்தா புயலாக வலுப்பெற்று, தமிழக கடலோர மாவட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம்.

prime9logo
152 Views
1 Min Read
Highlights
  • மோன்தா புயல் நாளை (அக். 28) காலை தீவிர புயலாக மாறக்கூடும்.
  • புயல் ஆந்திராவின் காக்கிநாடா - மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்ப்பு.
  • சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலவியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மோன்தா புயலாக வலுப்பெற்றுள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தீவிர புயலாக மாறக்கூடும்.

  சென்னைக்கு கிழக்கே 600 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ள மோன்தா புயல், நாளை மாலை- இரவு நேரத்தில் காக்கிநாடா மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும்  என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின்  அறிக்கையின் படி,

சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும் செங்கல்பட்டு,விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை ( 28-10-2025 ) மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள் 

திருவள்ளுர் மாவட்டத்தில் நாளை கனமழை முதல் மிககனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகள்,கன்னியாகுமாரி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply