தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியதால், பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.
தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இது அக்டோபர் 26 ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்றும் , வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் இந்த புயலுக்கு தாய்லாந்து நாடு பரிந்துரைத்த ‘மோன்தா’ ( Montha ) என பெயரிடப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ‘மோன்தா’ ( Montha ) புயலின் காரணமாக வரும் 27, 28 தேதிகளில் ஆந்திராவில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,விழுப்புரம்,ராணிப்பேட்டையில் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
