மதுரையில் முக்கிய புள்ளியை தூக்கிய இபிஎஸ்… அதிமுகவில் இணைந்த உசிலம்பட்டி திமுக சேர்மன்… அதிர்ச்சியில் அண்ணா அறிவாலயம
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சியில் திமுக சார்பாக போட்டியிட்டு சேர்மன் ஆனவர், சகுந்தலா. பொதுவாகவே உசிலம்பட்டி தொகுதி என்பது அதிமுகவின் கோட்டை, அந்த வகையில் திமுக வை சேர்ந்த ஒருவர் இருப்பது திமுக க்கு கூடுதல் பலம் என்றே சொல்லலாம். அதுக்கேற்றாற்போல் சேர்மன் சகுந்தலாவும் இவரது பணியை மிகச் சிறப்பாகவே பணியாற்றி வந்திருந்தார். இந்நிலையில் இன்று சகுந்தலா தனது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் அவருடைய மகனும், திமுக மதுரை தெற்கு இலக்கிய அணி செயலாளருமான விஜயும் இணைந்துள்ளார்.
கடந்த மாதம் உசிலம்பட்டி அமமுக நிர்வாகிகள் கூண்டோடு அமமுகவிலிருந்து விலகி, அதிமுகவில் இணைந்திருந்த நிலையில், தற்போது திமுகவின் முக்கிய நிர்வாகிகளும் அதிமுகவில் இணையும் நிகழ்வு உசிலம்பட்டியில் பேசுபொருளாகி உள்ளது.
திமுகவுக்கு இது புதிதல்ல, அதற்கு சான்றாக தேனி மாவட்டம் தாமரைக்குளம், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர், என பல பகுதிகளில் நடந்த நிகழ்வை இதற்கு உதாரணமாக கூறலாம்.
கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது, உசிலம்பட்டி நகர்மன்ற தலைவர் வேட்பாளராக திமுக தலைமை கழகம் செல்வி என்பவரை அறிவித்திருந்தது.
ஆனால் நகர செயலாளர் தங்கமலை பாண்டி தனது மனைவி பாண்டி அம்மாளுக்கு தலைவர் பதவி வழங்கப்படாததால் அவரது ஆதரவாளரான சகுந்தலாவை போட்டியிட வைத்து அதிமுக கவுன்சிலர்கள் ஆதரவுடன் வெற்றி பெற வைத்தார். இதன் காரணமாக அப்போது, உசிலம்பட்டி நகர செயலாளர் தங்கப்பாண்டி கட்சியிலிருந்து திமுக தலைமை நீக்கியது. இதுவும் இந்நிகழ்வுக்கு ஒரு காரணமாக இருக்க கூடும் எனவும் வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.
ஆளுங்கட்சியின் நகர்மன்றத் தலைவராக இருக்கும் ஒருவர் எதிர்க்கட்சியில் இணைவது என்பது தமிழக அரசியல் களத்தில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வை பார்க்கும்பொழுது கடந்த வருடம் மார்ச் மாதம் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அதிமுக நகர்மன்றத் தலைவர் ராமலட்சுமி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்ததுதான் ஞாபகத்திற்கு வருகிறது.
இதில் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலின் நாளை மதுரை செல்லவுள்ள நிலையில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஒரு நகராட்சி சேர்மன் எதிர்க்கட்சியில் இணைந்தது தான்.
அதிமுகவின் இச்செயலின் மூலம் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் சாதுர்யத்தை பார்க்க முடிகிறது.