பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜனவரி 2 ஆம் தேதியன்று திருச்சிக்கு செல்கிறார். திருச்சியில் மோடி அவர்கள் எந்தெந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் என்ற விபரங்கள் வெளியாகியிருக்கிறது. 

அதன்படி ஜனவரி 2 ஆம் தேதியன்று திருச்சிக்கு செல்லும் நரேந்திர மோடி , திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் 38 வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். இதனையடுத்து திருச்சியில் பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொண்டு ரூ.19,850 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ஜனவரி 2 ஆம் தேதியன்று திருச்சி பயணத்தை முடித்துக் கொண்டு 3 ஆம் தேதியன்று திருச்சியிலிருந்து லட்சத்தீவுக்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here