போக்குவரத்து கழகம் மூலம் செயல்படும் அரசுப் பேருந்துகள் சரியான முறையில் பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாகவே இருந்து வருகின்றது.
சில நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே ஓடும் பேருந்தின் படிக்கட்டுகள் கீழே விழுந்த புகைப்படம் வெளியாகியிருந்தது. இதன் எதிரொலியாக பேருந்துகளின் செயல்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டார்.
இதனையடுத்து தமிழ் நாடு போக்குவரத்துத் துறை செயலாளர் பணீந்தர ரெட்டி தமிழ்நாடு அரசின் அனைத்து பேருந்துகளின் தரத்தினை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், பழுதுகள் இருப்பின் அதனை அடுத்த 48 மணி நேரத்திற்குள் சரி செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்