டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் எதிர்வரும் போட்டித் தேர்வுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டுத் திட்டத்தை வெளியிட்டு வருகிறது.

இந்த ஆண்டு திட்டத்தின் கீழ், எதிர்வரும் ஆண்டில் நடைபெறவுள்ள துறை சார்ந்த தேர்வுகள் குறித்தும் குரூப்- I, II, IV உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் குறித்தும் விவரங்கள் அடங்கியிருக்கும். மேலும், ஆண்டின் எந்த மாதத்தில் தேர்வு குறித்த அறிவிப்பு (Notification) வெளியாகும், தோராயமான காலியிடங்கள், அதற்கான தேர்வு நடைபெறும் நாள் உள்ளிட்ட விவரங்கள் அறிவிப்பில் இடம்பெறும்.

WhatsApp Image 2023 12 20 at 6.10.33 PM 2023 12 9684fbf20428302f7ace500e7edf8c15

மேலும், ஆண்டின் எந்த மாதத்தில் தேர்வு குறித்த அறிவிப்பு (Notification) வெளியாகும், தோராயமான காலியிடங்கள், அதற்கான தேர்வு நடைபெறும் நாள் உள்ளிட்ட விவரங்கள் அறிவிப்பில் இடம்பெறும். ஆண்டுக்கான தேர்வு திட்டத்தை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் டிசம்பர் 15ம் தேதி வெளியிட இருப்பதாக கூறப்பட்டது. மேலும், டிஎன்பிஎஸ்சி அட்டவணை விரைவில் வெளியாகும் என தேர்வாணையம் தகவல் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி தேர்வு திட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் குரூப்  4 தேர்வு அறிவிப்பு ஜனவரியில் வெளியிடப்படும். குரூப் 4 தேர்வு ஜூன் மாதம் வெளியிடப்படும். குரூப் 1 தேர்வு அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்படும். குரூப் 1 தேர்வு ஜூலையில் நடத்தப்படும். வனப்பாதுகாவலர் தேர்வை டிஎன்பிஎஸ்சி முதன்முறையாக நடத்துக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here