இந்தியாவில் சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் தினந்தோறும் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றது. அவ்வகையில், கடந்த சில மாதங்களாக தங்கம் விலை ஏறுமுகமாக இருந்து.அதன்பின்னர் மத்திய பட்ஜெட் சற்று ஆறுதல் அளித்தது. அடுத்தடுத்த நாட்களில் வெகுவாக குறைந்து, ஒரு சவரன் ரூ.51 ஆயிரத்துக்கு கீழ் சென்றது.
கடந்த 4 நாட்களாக தங்கம் விலையில் மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.53,440-க்கும், ஒரு கிராம் ரூ. 6,680-க்கும் விற்று வந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.53,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,715-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.91.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.